என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உண்மை கண்டறியும் குழு
நீங்கள் தேடியது "உண்மை கண்டறியும் குழு"
சேலம் அருகே ரவுடி என்கவுண்டரில் உள்ள சந்தேகங்களை விசாரித்து உண்மை நிலையை அறிய மனித உரிமை ஆர்வலர்களை கொண்ட உண்மை அறியும் குழு துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் இன்று விசாரணையை தொடங்கியது. #SalemRowdy
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்தவர் சேட்டு மகன் கதிர்வேல் (32). இவர் மீது 2 கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கடந்த மாதம் காட்டூர் பகுதியை சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் (32) கொலை வழக்கில், ரவுடி கதிர்வேலு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இவரை காரிப்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கடந்த 2-ந் தேதி குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி கதிர்வேலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் துப்பாக்கியால் சுட்டதில், ரவுடி கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ரவுடியை என் கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டு, கொலையுண்ட கதிர்வேலின் ரத்தக்கறை படிந்த உடைகள், சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த ரத்த மாதிரிகள் மற்றும் கதிர்வேல் தாக்கியதில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் உடைகள், ரத்த மாதிரிகள் உள்ளிட்ட தடயங்கள் அனைத்தும் வாழப்பாடி குற்றவியல் மற்றும் உரிமையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சந்தோஷத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தடயங்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்து உறுதிபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே கதிர்வேலின் என்கவுண்டரில் சில மர்மங்கள் நிலவுவதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதால் இந்த வழக்கில் பரபரப்பு நிலவி வருகிறது.
கதிர்வேலின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரித்து உண்மை நிலையை அறிய மனித உரிமை ஆர்வலர்களை கொண்ட உண்மை அறியும் குழு துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் இன்று விசாரணையை தொடங்கியது.
அந்த குழுவினர் கதிர்வேல் உறவினர்கள், முறுக்கு வியாபாரி கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழனிசாமி, முத்து மற்றும் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு, துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரி, சம்பவ இடத்தில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை இன்றும் நாளையும் நடக்கிறது.
இந்த குழுவில் சென்னை மனித உரிமை மக்கள் கழக பேராசிரியர் மார்க்ஸ், வக்கீல் அரிபாபு உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர். #SalemRowdy

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காவல் துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Thoothukudifiring
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த 22 -ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய மக்கள் விசாரணைக்கான ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த குழுவில் மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் தலைமையில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், காவல்துறை தலைமை இயக்குனர்கள், மூத்த வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம்பெற்று உள்ளனர்.
இந்த குழுவினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த இடங்கள், துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள், தடியடியில் காயமடைந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தினார்கள். துப்பாக்கி சூடு, தடியடி, அத்துமீறல்கள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வாக்குமூலம் பெறப்பட்டன.
விசாரணையை தொடர்ந்து அந்த குழு சார்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றிடிபென் ஆகியோர் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைதி பேச்சு வார்த்தைக்கு அனைத்து தரப்பு மக்களையும் மாவட்ட நிர்வாகம் அழைக்கவில்லை. போராட்டக்காரர்களை பிரித்தாளும் சூழ்ச்சியாகவே தெரிகிறது. மேலும் பேச்சுவார்த்தையில் மாவட்ட கலெக்டர் பங்கேற்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கலெக்டரே முன்னிலை வகித்து நடத்தியுள்ளனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிடுவதற்கு பதிலாக கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தது, ஏற்கனவே வந்த லட்சக்கணக்கான மக்களை கணக்கில் எடுத்து கொள்ளாததை காட்டுகிறது. இது நிர்வாகத்தின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. காவல் துறையினர் அத்துமீறி நடந்துள்ளனர். துப்பாக்கி சூட்டிற்கு நவீன ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படும் நபர்கள் அந்த இடத்தில் இல்லை.
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளே மக்கள் பெருந்திரளாக போராட்டத்தில் பங்கேற்க காரணம். மே 23-ந் தேதி தூத்துக்குடியில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளும் உறவினர்களும் போலீசாரால் தாக்கப்பட்டனர்.
அண்ணா நகர் பகுதியில் போலீசார், வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி மக்களை அடித்து, இளைஞர்களை கைது செய்தனர். காவல்துறையின் கொடூரமான தாக்குதலால் பலர் மாற்றுத்திறனாளியாக மாற்றப்பட்டனர். மேலும் உளவியல் நோயாளியாக பலர் உருவாக்கப்பட்டனர்.
எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். ஸ்டெர்லைட் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு ஆலை இருந்த இடம் வெறுமையாக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்காக நினைவு சின்னம் அமைக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் நடந்த சட்டத்திற்கு புறம்பான தொடர் தேடலுக்கும், கைதுகளுக்கு, துன்புறுத்தல்களுக்கும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் அச்சுறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இன்னும் 2 வாரங்களில் இந்த குழு துப்பாக்கி சூடு குறித்து முழுமையான அறிக்கையை வெளியிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #Thoothukudifiring

100 நாட்களாக போராடிய மக்களை கலெக்டர் சந்திக்காதது சந்தேகத்தை எழுப்புகிறது. மக்களை தமிழக அமைச்சர்களோ, மத்திய மந்திரிகளோ சந்திக்கவில்லை.

×

X